தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம்ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் நேற்றைய இன்ஸ்டாகிராம் கணக்கை ஓபன் செய்த நிலையில் வெறும் 99 நிமிடங்களிலேயே 10 லட்சம் பின் தொடர்பாளர்களை பெற்றுவிட்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதுநாள் வரை இன்ஸ்டாகிராம் கணக்கு இல்லாமல் இருந்த விஜய் நேற்று மதியம் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் கணக்கை தொடங்கினார். அதிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்தில் அவரை 10 லட்சம் பேர் பின் தொடர ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து இன்ஸ்ட்டாவில் விஜய் முதல் ஸ்டோரியை வைக்க அதுவும் வைரலானது. இந்நிலையில் இன்ஸ்டார் கணக்கு தொடங்கிய விஜயை வரவேற்று சிம்புவும் விஜய் புகைப்படத்துடன் ஒரு ஸ்டோரி வைக்க விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.