மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இன்றோடு தேர்தல் பிரச்சாரம் ஓய்வடைகிறது. இந்நிலையில் உங்களிடம் வாக்கு சேகரிக்க வரவில்லை. ஆசி வாங்கவே வந்தேன் என அண்ணாமலை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். கோவை முதியோர் காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற அவர், பிரசாரத்திற்கு சென்ற போது வெயிலில் முதியோர்கள் 2 மணி நேரம் காத்திருந்தனர். இது முழுக்க அன்பு மட்டுமே. 450 ஆண்டுகளுக்கு இந்தியா எந்த இடத்தில் இருந்ததோ, மறுபடியும் அந்த இடத்திற்கு மீண்டும் செல்லும். இது காலத்தில் கட்டாயம் எனவும் பேசினார்