நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கு எதிராக அரசு பொது சட்டங்களை இயற்றினாலும் சில காமக்கொடூரர்கள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பெங்களூருவில் காலையில் வாக்கிங் சென்ற பெண்ணுக்கு நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாக்கிங் சென்ற அந்த பெண்ணை விரட்டிய நபர், பெண்ணின் வாயை பொத்துகிறார். அந்தப் பெண் சத்தமிட்ட நிலையில் அவர் அங்கிருந்து ஓடுகிறார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.