சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவில் கூறபட்டுள்ளதாவது, நாட்டில் நடைபெறும் சட்டப்பேரவை, உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்தவும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வாக்குரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் மத்திய அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட வேண்டும் என  கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் சார்பாக தாக்கல் ஆன பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பாக வாக்காளர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்படும். அதன் பின் அவர்களின் கருத்து கேட்கப்படுகிறது. இதனையடுத்து பெயர் நீக்கம் செய்யப்படுகிறது. மேலும் வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை நீக்க வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முறையான நோட்டீஸ் இல்லாமல் கருத்தை கேட்காமல் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்க அதிகாரம் இல்லை என கூறியுள்ளது.