வாக்காளர் அடையாள அட்டை பெறுவது இனி ரொம்ப ஈஸி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

நம் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை என்பது மிகவும் அவசியம். பழைய வாக்காளர் அடையாள அட்டைகள் அனைத்தும் கருப்பு வெள்ளை நிறத்தில் மட்டுமே இருக்கின்றன. அவ்வாறான பழைய வாக்காளர் அட்டைகள் தற்போது வண்ண அடையாள அட்டையாக மாற்றி தரப்படுகின்றன. அவ்வாறு மாற்றுவதற்கு நீங்கள் செல்போன் மூலமாக விண்ணப்பிக்கலாம். அதில் உங்களுடைய பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றை மாற்றி புதிய வண்ண வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?

அதற்கு https://www.nvsp.in என்ற இணையத்தள முகவரியை உள்ளீடு செய்ய வேண்டும். அதில் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு என்று தனியாக ஒரு option உள்ளது. அதில் சென்று உங்களின் முழு விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். மேலும் தற்போதைய புகைப்படம், முகவரி மற்றும் அடையாள அட்டை போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இதையெல்லாம் செய்து முடித்த பிறகு நீங்கள் வண்ண வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

அதுமட்டுமன்றி புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை மின்னணு வடிவத்தில் மாற்றிக் கொள்ளலாம். தேவையான இடங்களில் காகித வடிவில் காட்டாமல், மின்னணு முறையில் காண்பித்துக் கொள்ளலாம். தேவையான மாற்றங்களையும் படிவத்தையும் பூர்த்தி செய்து இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *