வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…. சென்னையில் இன்று முதல் முக்கிய மாற்றம்…. வெளியான அறிவிப்பு….!!!!

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னையின் முக்கிய சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ஈ.வெ.ரா சாலை, எம்.சி நிக்கோலஸ் சாலை, சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சேத்துபட்டு சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் ஹாரிங்டன் சாலையை கடக்க காலை 6 மணி முதல் 8 மணி வரை தடை விதிக்கபட்டுள்ளது. மேலும், ஹாரிங்டன் சாலையில் சேத்துப்பட்டு சிக்னல் சந்திப்பு வழியாக நுங்கம்பாக்கம் மற்றும் ஸ்பர்டாங்க் சாலை செல்லும் வாகனங்கள், சேத்துப்பட்டு சிக்னல் சந்திப்பில் நேராக மற்றும் வலதுபுறம் திரும்ப அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வாகனங்கள் சேத்துப்பட்டு சந்திப்பில் இடது புறமாக திரும்பி எம்.சி நிக்கோலஸ் சாலை, டாக்டர் குருசாமி மேம்பாலம் சர்வீஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி டாக்டர் குருசாமி மேம்பாலம் கீழ் பகுதி சாலை வழியாக சென்று மறுபடியும் வலது புறம் திரும்பி டாக்டர் குருசாமி மேம்பாலம் சர்வீஸ் சாலை, எம்சி நிக்கோலஸ் சாலை வழியாக சேத்துப்பட்டு சந்திப்புக்கு செல்லலாம் என சொல்லப்பட்டுள்ளது.

மேலும் காலை 9 மணி முதல் 11 மணி வரை, ஈ.வெ.ரா சாலை சந்திப்பு முதல் ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பு வரை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது எனவும், கங்காதீஸ்வரர் கோயில் தெருவில் இருந்து தாஸ்பிரகாஷ் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் அண்ணாமலை சாலைக்குள் அனுமதிக்கப்படாது எனவும், இந்த வாகனங்கள் கங்காதீஸ்வரர் கோயில் தெரு மற்றும் ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பில் இடது புறமாக திரும்பி டாக்டர் அழகப்பா சாலை, வள்ளியம்மாள் தெரு சந்திப்பில் வலது புறமாக திரும்பி நாயர் பாயின்ட் சந்திப்பில் நேராகவோ, வலது மற்றும் இடது புறமாக திரும்பியோ செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, காசி பாயின்ட் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நாளை முதல் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், எம்.ஜி.ஆர்.நகரில் இருந்து பிள்ளையார் கோயில் தெரு வழியாக ஜாபர்கான்பேட்டை மற்றும் கிண்டி செல்லும் வாகனங்கள் காசி பாயின்ட் சந்திப்பில் இடதுபுறம் திருப்பி உதயம் தியேட்டரை நோக்கி சுமார் 150 மீட்டருக்கு சென்று கே.கே.நகர் ஆர்டிஓ அலுவலகம் மற்றும் அசோக் நகர் 11வது அவென்யூ சந்திப்பில் யு-டர்ன் எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *