இந்தியாவில் மழை மற்றும் குளிர் காலம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு வருடமும் மார்ச் முதல் மே மாதம் வரை வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் வாகனங்களில் பெட்ரோலை முழுமையாக நிரப்பக் கூடாது என்றும் அவ்வாறு நிரப்பினால் டேங்க் வெடித்து விடும் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. ஒவ்வொரு வருடமும் இது போன்ற தகவல் பரவி வருகிறது.
வெயில் காலத்தில் பெட்ரோல் டேங்க்கை முழுமையாக நிரப்பும் போது அதிக வெப்பம் காரணமாக பெட்ரோல் வெப்பமடைந்து அதில் உள்ள வாயு வெளியேற முடியாமல் வெடித்து விடும் என செய்தி வெளியாகி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக வாகனங்களில் முழுமையாக பெட்ரோலை நிரப்புவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பினால் வெடித்து விடும் என்று பரவும் தகவல் முற்றிலும் போலியானது என தெரிவித்துள்ளது