வாகனத்திலிருந்து வந்த துர்நாற்றம்…. “100 கிலோ” கெட்டுப்போன மாட்டிறைச்சி பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றங்கரையோரம் வாகனத்தில் மூட்டை கட்டி வைக்கப்பட்டிருக்கும் மாட்டு இறைச்சியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராஜா மற்றும் மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று வாகனத்தை சோதனை செய்தபோது 100 கிலோ மாட்டிறைச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கால்நடை துறை மருத்துவர்களை வரவழைத்து சோதனை செய்து பார்த்த போது மாட்டு இறைச்சி கெட்டுப்போனது உறுதியானது.

இதனால் இறைச்சி மீது பிளீச்சிங் பவுடரை தூவி கொடுங்கையூர் குப்பை கிடங்குக்கு கொண்டு சென்று அழித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, வாகனத்தில் கெட்டுப்போன மாட்டிறைச்சியை கொண்டு வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். பொதுமக்கள் இறைச்சிகளை வாங்கும் போது தரமானதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். கெட்டுப்போன இறைச்சிகள் விற்பனை செய்வது குறித்து அறிந்தால் 9444042322 என்ற உணவு பாதுகாப்பு துறை எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply