உலக அளவில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. அப்படி பயன்படுத்தப்படும் வாகனங்களில் ஒவ்வொரு வாகனங்களுக்கும் வண்ண நம்பர் பிளேட் கொடுக்கப்பட்டிருக்கும். அதற்கான விளக்கம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வெள்ளை பலகையில் கருப்பு எண் எழுதப்பட்டிருந்தால் அது தனியார் வாகனம்.

மஞ்சள் பலகையில் கருப்பு எண் எழுதப்பட்டிருந்தால் வணிகம் சார்ந்த வாகனம் (ஆட்டோ, டாக்ஸிகள், லாரிகள், பேருந்துகள்)

கருப்பு பலகையில் மஞ்சள் நிறம் இருந்தால் வாடகை வாகனம் (வாடகை கார்கள், டாக்ஸிகள் மற்றும் வண்டிகள்)

பச்சை பலகையில் வெள்ளை நிறம் இருந்தால் மின்சார வாகனம்

மஞ்சள் பலகையில் சிவப்பு நிறம் இருந்தால் வர்த்தகச் சான்றிதழ் உடன் கூடிய வாகனம்

நீல பலகையில் வெள்ளை நிறம் இருந்தால் தூதரக அலுவலக வாகனம்

பச்சை பலகையில் மஞ்சள் நிறம் இருந்தால் மின் போக்குவரத்து மற்றும் வணிக வாகனம்.

தேசிய சின்னத்துடன் கூடிய சிவப்பு பலகை இருந்தால் குடியரசு தலைவர் வாகனம்.