வழங்கப்படும் அண்ணா பதக்கம்…. எப்படி விண்ணப்பிப்பது…. முழு விவரம் இதோ….!!!!

மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின் போது வீர தீர செயல்களுக்காக அண்ணா பதக்கம் முதலமைச்சர் கையால் வழங்கப்படுவது வழக்கம். இதில் 1  லட்சத்திற்கான காசோலை, ஒரு பழக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் அடங்கும். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் குடி மக்களுக்கும் வயதை பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்தினை  காப்பதில் வீர தீர செயல்களை புரிந்தவர்களாக  இருக்க வேண்டும்

மேலும் தகுதியானவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்தோ  அடுத்த மாதம் 15 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்குப் பின் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.