வளர்ப்பு நாயை கவ்வி சென்ற சிறுத்தை…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. பீதியில் பொதுமக்கள்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 28-ஆம் தேதி கல்லக் கொரை கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தையை பார்த்து நாய்கள் குரைத்தது. அப்போது வளர்ப்பு நாய் ஒன்றை சிறுத்தை கவ்வி சென்ற காட்சிகள் அங்கு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனை பார்த்து பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதற்கிடையில் சிறுத்தை நாயை கவ்வி செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. எனவே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.