வல்லம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்… ” 1 கோடியில் வளர்ச்சிப் பணிகளுக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்”….!!!!

வல்லம் ஒன்றிய குழு கூட்டத்தில் ஒரு கோடியில் வளர்ச்சிப்பணிக்காக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம்  நடைபெற்ற நிலையில் ஒன்றிய குழு தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்க வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி முன்னிலை வகிக்க துணைத்தலைவர் மலர்விழி, அண்ணாதுரை, மேலாளர் மணிகண்டன், உறுப்பினர்கள் கோபால், ஏழுமலை, கம்சலா, ராஜேந்திரன், பத்மநாபன், பக்தவச்சலம், கலைவாணி, இந்துமதி ஆகிய உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

கூட்டத்தில் 25 ஊராட்சிகளில் தனிநபர் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு, கழிவு நீர் கால்வாய் அமைத்தல் ஆகிய பணிகளுக்காக ரூபாய் 67 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பில் செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் 44 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் மூன்று இடங்களில் தார் சாலை அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *