வலியில் துடித்த இளம்பெண்…. மாத்திரை வாங்க சென்ற தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கனிராவுத்தர்குளம் காந்திநகர் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான நிவேதா(24) என்ற மகள் இருந்துள்ளார். இவர் கோவையில் இருக்கும் தனியார் நிறுவன விடுதியில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களாக உடல்நலக்குறைவால் நிவேதா வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று வயிற்றுவலியால் அவதிப்பட்ட நிவேதாவிற்கு மாத்திரை வாங்குவதற்காக ராமசாமி மெடிக்கலுக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது தனது மகள் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு ராமசாமி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நிவேதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *