உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த ரோஷினி என்ற பெண்ணுக்கு சாலையிலே பிரசவம் பார்த்த இரண்டு செவிலியர்களின் செயல் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ரோஷினிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் அவருடைய கணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் சாலையில் படுக்க வைத்து கூக்குரலிட்டு வைத்திருக்கிறார். இதனைப் பார்த்த செவிலியர்கள் ரோஷினிக்கு உதவி செய்து பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். இவர்களின் செயல் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.