வலது கை விரல்களை மட்டுமே பயன்படுத்தி…. தட்டச்சு தேர்வு எழுதி அசத்திய மாணவி…. குவியும் பாராட்டுக்கள்….!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொழில்நுட்ப வாரியம் சார்பாக தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலை, முதுநிலை தேர்வுகள் நடைபெற்றுள்ளது. இதில் 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் வெண்ணந்தூர் விமல் தட்டச்சு பள்ளியில் பயிற்சி பெற்ற மாணவி பாவனா ஸ்ரீக்கு போலியோ நோயால் இடது கை பாதிக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு படிக்கும் இந்த மாணவி தனது வயது கை விரல்களால் மட்டுமே ஆங்கில தட்டச்சு மேல்நிலை தேர்வு எழுதி அசத்தியுள்ளார். இந்த மாணவியை பலரும் பாராட்டியுள்ளனர். இவர் எழுதுவது முதல் அனைத்து வேலைகளையும் வலது கையால் மட்டுமே செய்வது குறிப்பிடத்தக்கதாகும்.