வருஷம் முழுவதும் தண்ணி வந்துகிட்டே இருக்க திட்டம்…. அ.தி.மு.க வேட்பாளரின் அதிரடி பேச்சு…. நெல்லையில் சூடுபிடிக்கும் பிரச்சாரம்….!!

திருநெல்வேலியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க வேட்பாளர் அவர் நிற்கும் தொகுதியில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் அவரவர் நிற்கும் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக நிற்கும் இன்பதுரை அத்தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் வள்ளியூரிற்கு தெற்கு பகுதியிலிருக்கும் ஒன்றியத்திற்குட்பட்ட பல கிராமங்களுக்கு திறந்தவெளி ஜீப்பில் சென்று கொண்டே வாக்கு சேகரித்தார். இதனையடுத்து அவர் பொதுமக்களிடம் கூறுகையில், தாமிரபரணி நதியின் நீரினை இணைக்கும் திட்டத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகிகவும், ராதாபுரத்திலுள்ள கால்வாயில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வருவதற்கான திட்டத்தினை கொண்டு வந்ததாகவும் பேசியுள்ளார். மேலும் அவர் பல நலத்திட்டங்களை பொது மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கினை சேகரித்தார்.