“வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு”…. ஆவணங்கள் சரிபார்ப்பு….!!!!!!

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் கோப்புகளை  ஆட்சியர் அமர்குஷ்வாஹா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  பின் அவர் கூறியுள்ளதாவது, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை சார்பாக இ-பட்டா , இ-அடங்கல் , இலவச வீட்டுமனை பட்டா, நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றம், நிலமாற்றம், மூத்த குடி மகன்கள் பராமரிப்பு ஆகிய பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

வீட்டுமனை பட்டா கோரிக்கை மனுக்களுக்கு முன்னுரிமை தந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீதிமன்ற கோப்புகள், உட்கோட்ட சிறப்பு நிர்வாக நடுவரின் பணிகள், குற்ற நடைமுறைகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.