வரும் 19-ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பணி நடைபெறுவதால் அயனாவரம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி வரும் 19ஆம் தேதி முதல் ஆண்டர்சன் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டர்சன் சாலையில் RTO அலுவலகம் சந்திப்பு மூலம் கான்ஸ்டீபன் சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. பில்கிங்டன் சாலையில் கொன்னூர் நெடுஞ்சாலை முதல் கான்ஸ்டீபன் சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது.

அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலை சந்திப்பில் இருந்து வழக்கம்போல் பெரம்பூர் நோக்கி செல்லலாம். ஆண்டர்சன் சாலையில் இருந்து அயனாவரம் கொன்று சாலைக்கு செல்ல இயலாது. அதெல்லாம் இருக்கட்டும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் கான்ஸ்டீபன் சாலை மற்றும் பில்கிங்டன் சாலை சந்திப்பில் இருந்து பில்கிங்டன் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலை க்கு செல்லலாம் என்ற இன்னும் சில சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே வருகின்ற 19ஆம் தேதி முதல் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு பெரு நகர போக்குவரத்து காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *