வரும் 19-ஆம் தேதிக்கு பின்…. மாநிலம் முழுவதும் பவர் கட்…. அமைச்சர் ஷாக் நியூஸ்…!!!

நாடு முழுவதும் நிலக்கரி மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் 135 மின் நிலையங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பதன் காரணமாக டெல்லி, பஞ்சாப், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனால் மின்வெட்டு மூலமாக மின்சாரத்தை சேமிக்கும் வகையில் மாநில அரசுகள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கேரள மாநிலம் மின்சாரத்துறை அமைச்சர் கே. கிருஷ்ணன் குட்டி கேரளாவில் மின் தடையை அமல்படுத்துவது குறித்து வரும் 19ம் தேதி முடிவெடுக்கப்படும் என்றும், தேசிய அளவில் நிலக்கரி தட்டுப்பாடு குறித்து தெளிவான தகவல் இல்லாத காரணத்தால் மின் தடையை அமல்படுத்துவது போவதாகவும் கூறியுள்ளார். மேலும் கேரள மாநிலத்தில் தினசரி 400 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. தினசரி 3800 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. அடுத்த 3 நாட்களுக்கு தேவையான மின்சாரம் தற்போது கையிருப்பில் உள்ளது என்று கூறியுள்ளார்.