வரும் 15ஆம் தேதி மஞ்சளாறு, சோத்துப்பாக்கம் அணைகளிலிருந்து நீர் திறப்பு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மஞ்சளாறு, சோத்துப்பாக்கம் அணைகளிலிருந்து 15 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலுள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்களின் பாசனத்திற்காக தேனி மாவட்டத்திலுள்ள மஞ்சளாறு நீர்த்தேக்கத்திலிருந்து 15ஆம் தேதி முதல் 152 நாட்களுக்கு மொத்தம் 937.41 மில்லியன் கன அடிக்கு குறையாமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலமாக தேனி மாவட்டத்தில் 3,148 ஏக்கர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் 2,111 ஏக்கர் மொத்தம் 5,259 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம், சோத்துப்பாறை நீர்தேக்கத்திலிருந்து முதல்போகமாக 1,825 ஏக்கர் பழைய நன்செய் நிலங்களுக்கும், கன ஆயிரத்து 40 ஏக்கர் புதிய புன்செய் நிலங்களுக்கு மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும் சேர்த்து அக்டோபர் 15-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி வரை 62 நாட்களுக்கு வினாடிக்கு 30 கன அடி வீதமும் அடுத்த 31 நாட்களுக்கு வினாடிக்கு 77 கன அடி வீதமும் கடைசி 59 நாட்களுக்கு வினாடிக்கு 25 கன அடி வீதமும் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக தேனி மாவட்டத்தில் 2,865 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *