வந்தே பாரத் ரயிலில் வரும்  பிப்ரவரி மாதம் முதல் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை  இணைப்பதற்கு இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. 2024 ஆம் வருடம் படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளோடு வந்தே பாரத் ரயில்களை இயக்குவதற்காக முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கும்  பணிகள் நடைபெற்று வருகிறது.

இன்னும் ஓரிரு வாரங்களில் தயாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ரயில் பெட்டிகள் அடுத்த தலைமுறைக்கான உள்கட்ட அமைப்பை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. படுக்கைகளில் ஏறுவதற்கு வசதியான ஏணிகள் அமைக்கப்பட உள்ளன. நாடு முழுவதும் தற்பொழுது இருக்கை வசதியோடு 33 வந்தே வாரத்தில் இயக்கப்பட்டு வரும் நிலையில் தயாரிப்பு பணிகள்  முடிவடைந்ததும் 75 ரயில்களில் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே  பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.