வருமான வரி செலுத்துவோருக்கு புதிய செல்போன் செயலி அறிமுகம்…. இனி ரொம்ப ஈஸி….!!!!

வருமான வரித்துறை வரி செலுத்துபவர்கள் நலனை கருதி “ஏ ஐ எஸ் பார் வழி செலுத்துவோர்” என்ற புதிய செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக வரி செலுத்துபவர்கள் தங்களின் தகவல் சுருக்கம்,தகவல் அறிக்கைகளை ஆண்டுதோறும் இதில் பார்த்துக் கொள்ள முடியும். வருமானவரி துறையால் இலவசமாக வழங்கப்படும் செல்போன் பயன்பாடு ஆகும். இந்த செயலை கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும்.

வரி செலுத்துவர் தொடர்பான பல ஆதாரங்கள் தொடர்பான தகவல்களை காண்பதற்கு இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த செல்போன் செயலியை அணுக வரி செலுத்துவோர் பயன்பாட்டில் பதிவு செய்ய வேண்டும். செல்போன் பயன்பாட்டை அணுகுவதற்கு நான்கு இலக்க பின்னை அமைக்கவும். அதன் மூலம் மேம்படுத்தப்பட்ட வரி செலுத்துவோர் சேவைகள் இணக்கத்தை எளிதாக்குகிறது என்று டெல்லி வருமான வரி கமிஷனர் தெரிவித்துள்ளார்.