வராத இடத்துக்கு வந்த கொரோனா… ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி…!!!

குளிர் பிரதேசமான அண்டார்டிகாவில் முதன்முறையாக 36 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் குளிர் பிரதேசமான அண்டார்டிகாவில் மனிதர்கள் அதிகம் வசிப்பது இல்லை என்றாலும் சில ஆய்வாளர்கள் தங்கி ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். எனவே அங்கு கொரோனா பாதிப்பு இல்லாமல் இதுவரை இருந்தது. ஆனால் முதல்முறையாக 36 ஊழியர்களுக்கு கொரோனவைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைவரும் சிலியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால் அனைத்து முக்கிய ஆராய்ச்சிகளும் தரப்பட்டுள்ளன.