சவுதி அரேபியா ஒரு பாலைவனப் பகுதியாகும். இங்கு கடுமையான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் தற்போது எதிர்பாராத விதமாக வேறொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது சவுதி அரேபியாவில் அல் ஜாஃப் என்ற பகுதி உள்ளது. இந்த பாலைவனத்தில் தற்போது கடுமையான அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக சஹாரா பாலைவனத்தில் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் தற்போது முதல் முறையாக பாலைவனத்தில் பனிப்பொழிவும் நிகழ்ந்துள்ளது. பாலைவனத்தில் வரலாற்றில் முதல்முறையாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது உள்ளூர் மக்கள் மட்டும் இன்றி பிற நாட்டு மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.