அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானது. 270 எலக்டோரல் வாக்குகள்  பெற வேண்டும். காலை முதலே டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்து நிலையில் தற்போது அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெற்று விட்டார். இந்த நிலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு எனது நண்பரான டிரம்புக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.