வரன் பார்க்க சென்ற இடத்தில் விபத்து… பெண்ணின் தாய் உள்ளிட்ட 3 பெண்கள் பலி … சோகம்…!!!

மகளுக்கு வரன் பார்த்துவிட்டு குடும்பத்தினர் வீடு திரும்பியபோது ,திருவலம் பகுதியில் ஆட்டோ நிலைதடுமாறியாதல்  ஏற்பட்ட  விபத்தில்  பெண்ணின் தயார் உள்ளிட்ட  3 பெண்கள் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது .

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் பகுதிக்கு அருகேயுள்ள பரதராமி வி.டி பாளையம் பகுதியை சேர்ந்த ஒரே விபத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில், காரை பகுதியில் நேற்று முன்தினம் மகளுக்கு வரன் பார்க்க சரக்கு ஆட்டோவில் சென்றுள்ளனர். பின் காரை பகுதிக்கு சென்று, வரன் பார்த்துவிட்டு ஊருக்கு செல்ல , சென்னை- சித்தூர் சாலையில் உள்ள திருவலம் இ .பி கூட்ரோடு அருகில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஆட்டோவின் டயர் வெடித்ததில்  நிலைதடுமாறி ஆட்டோ  விழுந்துள்ளது.

இதனால் ஆட்டோவில் இருந்த  குடும்பத்தினர் 29 பேரில், 10க்கும் மேற்பட்டோருக்கு  பலத்த காயம் ஏற்பட்டு அவர்களை உடனடியாக வாலாஜா மற்றும் வேலூர் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்தில் பெண்ணின் தாயாரான 55 வயதுடைய ரஞ்சிதம், அதே பகுதியில் 50 வயதுடைய வெண்ணிலா மற்றும் பிச்சனூர் ஆர்எஸ் நகரில் உள்ள 45 வயதுடைய வசந்தா மூன்று பெண்களும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக திருவலம் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *