வயிற்றில் எந்த இடத்தில் வலி வந்தால் என்ன பிரச்னை…? கண்டுபிடிக்க எளிய வழிகள்…!!

நமது வயிற்றில் எந்த இடத்தில் வலி வந்தால் என்ன பிரச்சினை என்பதை எளிதாக கண்டுபிடிக்க சில வழிமுறைகளை தெரிந்து கொள்வோம்.

நமக்கு வயிற்றில் வலி வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றது. முதலாவது அல்சர் எனும் இரைப்பை புண். அடிக்கடி வயிறு வலி வந்தால் என்ன காரணம் என்று மருத்துவரிடம் பரிசோதிப்பது மிகவும் நல்லது.

அல்சர் என்றால் என்ன?

அல்சரின் ஆரம்பத்தில் நெஞ்சுப்பகுதியில் எரிச்சலும் வலியும் ஏற்படும். அடிக்கடி புளித்த ஏப்பம் வரும். பசியிருக்காது, கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய மாதிரி இருக்கும். சில நேரத்தில் நெஞ்சில் பந்து அடைத்தது போலிருக்கும். ஏப்பம் விட்டதும் அது சரியாகிவிடும். நோயின் அடுத்த கட்டத்தில் வயிற்றுவலியும் வாந்தியும் ஏற்படும். அல்சர் இருந்தால் பசிக்கிற நேரத்தில் வயிற்றை கவ்வி பிடிக்கும். அல்சர் கடுமை ஆகிவிட்டது என்றால் ரத்த வாந்தி வரும். மலம் கருப்பாக இருக்கும்.

வயிற்றுப்  எந்த பகுதியில் வலி வந்தால் என்ன பாதிப்பு என்பதை தோராயமாக தெரிந்துகொள்வோம்.

வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கமாக வலி எடுத்தால், கல்லீரல், பித்தப்பை, இரைப்பை, முன் சிறுகுடல் ஆகியவற்றில் பிரச்சினை இருக்கலாம்.

மேல்வயிற்றின் நடுப்பகுதியில் வலி ஏற்பட்டால் இரைப்பை, முன்சிறுகுடல், கணையம் ஆகியவற்றில் பிரச்சினை இருக்கலாம்.

மேல் வயிற்றின் இடது பக்கத்தில் வலி உண்டானால், மண்ணீரலில் பிரச்சினை இருக்கலாம்.

> வயிற்றின் நடுப்பகுதியில் இடது பக்கமாக ஏற்படும் வலிக்கு இடது சிறுநீரகம் காரணமாக இருக்கலாம்.

வலது பக்கத்தில் வலி என்றால், வலது சிறுநீரகம் காரணமாக இருக்கலாம்.

நடு வயிற்றின் மத்தியப் பகுதியில் வலி ஏற்படுகிறது என்றால், சிறுகுடலில் பிரச்சினை என்று யூகிக்கலாம்.

அடிவயிற்றின் வலது பக்க வலிக்குக் குடல்வால் அழற்சி, வலது சிறுநீர்க் குழாய் கல் (Ureteric Stone), கருக்குழாய் பாதிப்பு, ஏறுகுடல் கோளாறு போன்றவை முக்கியமான காரணங்கள்.

அடிவயிற்றில், தொப்புளுக்குக் கீழ் வலி வந்தால், கருப்பை அல்லது சிறுநீர்ப்பைக் கோளாறு காரணமாகும்.

அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலித்தால், இடது சிறுநீர்க் குழாய் கல் / இறங்கு குடல் கோளாறு இருப்பதற்குச் சாத்தியமிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *