வயலுக்கு சென்ற மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சிறுமி கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டையில் ராக்கப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிஸ்திரி(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கவிஸ்திரி தங்களுக்கு சொந்தமான வயலுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுமி கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *