வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் வசித்து வரும் தம்பதி தாமோதரன்-கவிதா. இந்த நிலையில் இன்று தன்னுடைய சொந்த நிலத்தில் வேர்க்கடலை பயிரிடுவதற்காக டிராக்டர் கொண்டு உழுவதற்காக தமோதிரன் சென்றுள்ளார். அப்போது அவரோடு அவரது இளைய மகன் பரத்குமார் (8) சென்றுள்ளார்.
அப்போது ஆதிகேசவன் என்பவர் டிராக்டரை கொண்டு உழுதுகொண்டிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக சிறுவன் பரத்குமார் பின் வழியாக உழவு இயந்திரத்தின் மீது ஏறியிருக்கிறார். இதில் நிலை தடுமாறி கீழ விழுந்ததில் டிராக்டரின் பிளேடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தனது தந்தை கண் முன்னே மகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.