கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30ஆம் தேதி நிலசரிவு ஏற்பட்ட நிலையில் இதில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியானது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஆறாவது நாளாக இன்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நிலச்சரிவில் சிக்கிய உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 கடந்துள்ளது.
இந்த நிலையில் இது குறித்து நடிகர் அல்லு அர்ஜுன் கூறியதாவது, சமீபத்தில் கேரளாவில் நடந்த நிலச்சரிவு சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. மறுவாழ்வு பணிகளுக்கு ஆதரவாக 25 லட்சத்தை நன்கொடையாக வழங்க விரும்புகின்றேன். கேரளா எப்பொழுதுமே எனக்கு மிகுந்த அன்பை கொடுத்துள்ளது. வயநாடு மக்களின் பாதுகாப்பு மற்றும் வலிமைக்காக பிரார்த்தனை செய்கிறேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.