கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இதுவரை 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் பல உடல்கள் இன்னும் மண்ணில் புதைந்து கிடக்கின்றன. வயநாடு நிலச்சரிவு விவகாரம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைவரும் வயநாட்டிற்கு நிவாரணம் வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் வயநாடு பேரழிவு சாதாரணமானது அல்ல இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் சிதைந்துள்ளன என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். வயநாடு நிலச்சரிவு பாதிப்புகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது குறித்த தகவல் அறிந்தது முதலே ஒவ்வொரு பணிகளையும் கண்காணித்து வருகிறேன். கேரளா அரசு உடன் எப்போதும் மத்திய அரசு துணை நிற்கிறது. நிதி பற்றாக்குறையால் எந்த ஒரு பணியும் தடைப்படாமல் பார்த்துக் கொள்வோம் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார்.