பிரபல மலையாள நடிகை திவ்யா ஸ்ரீதர் கண்டக்டர் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவருக்கு திருமணம் ஆகி தேவானந்த் என்ற மகனும், மாயா என்ற மகளும் உள்ளனர். கடந்த 2019-ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக திவ்யா ஸ்ரீதர் தனது கணவரை விட்டு பிரிந்தார். அதன் பிறகு பிரபல சீரியல்களில் நடித்த பத்திரமாட்டு சீரியலில் நடிக்கும் போது திவ்யா ஸ்ரீதர் தன்னுடன் நடித்த க்ரிஷ் வேணுகோபால் என்பவரை காதலித்துள்ளார்.
இருவரும் கடந்த புதன்கிழமை குருவாயூர் கோவிலில் வைத்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். வேணுகோபால் நடிகராக மட்டுமில்லாமல் பேச்சாளராகவும், இயக்குனராகவும், எழுத்தாளராகவும் உள்ளார். அவருக்கு 50 வயது ஆகிறது. திவ்யாவுக்கும் வேணுகோபாலுக்கும் 10 வயது வித்தியாசம். இது குறித்து திவ்யா கூறும் போது நான் முதலில் வேணுகோபாலை பார்த்தபோது பயந்தேன். கடைசியில் அவர் காதலை சொன்னபோது அவர் கேலி செய்கிறார் என நினைத்தேன்.
அதன் பிறகு தான் அவர் கேலி செய்யவில்லை என்பது தெரிந்தது. இது குறித்து என் குழந்தைகளிடம் கலந்து ஆலோசித்தேன். அது உண்மையான பிணைப்பாக இருக்கும் என தெரிந்த பிறகுதான் திருமணத்திற்கு சம்மதித்தேன் என கூறியுள்ளார். வேணுகோபால் கூறும்போது, இருவரின் குடும்பமும் ஒத்து தான் திருமணத்தை செய்து கொண்டோம். வேடிக்கை பார்ப்பவர்களுக்கு என்ன பிரச்சனை. நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிப்பது தான் பலரது வேலையாக உள்ளது. எங்கள் திருமணம் குறித்து எந்த எதிர்மறை கருத்து வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என வேணுகோபால் கூறியுள்ளார்.