வன்னியர்களுக்கு எதிரான தீர்ப்பு…. எங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி…. கருணாஸ் அதிரடி பேட்டி …!!

 

செய்தியாளர்களை சந்தித்த முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு முடிவை எதிர்த்து வழக்கிலே 25க்கும் மேற்பட்ட வழக்குகள் போட்டாலும் கூட இந்த தீர்ப்பானது புலிப்படையின் சார்பாக எனது அமைப்பைச் சார்ந்த பால முரளி என்பவர் ஸ்டாலின் என்பவர் தொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.ஆரம்பத்தில் இருந்து நாங்கள் வலியுறுத்துவது, தமிழ்நாட்டில் இருக்கின்ற சீர்மரபினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட அனைத்து சமுதாய மக்ளையும் ஜாதி ரீதியாக கணக்கெடுப்பு நடத்தி,

அந்த மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கை. அவ்வாறு  கணக்கெடுப்பு  நடத்தி  வழங்கப்படும் பட்சத்தில் அணைத்து தரப்பு மக்களுக்கும் அவர்களுடைய ஜனத்தொகையின் அடிப்படையில் கல்வியிலும் ,வேலைவாய்ப்பிலும்,அவர்களுக்கு நியாயமான இட ஒதுக்கீடு கிடைக்கும். ஜாதி ரீதியாக கனெக்கெடுப்பு நடத்தி மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதுதான் அணைத்து தரப்பு மக்களின் கோரிக்கை.

பரமக்குடி அரசு கல்லூரிகளில் 7 சீட்டு இந்த இந்த ஒதிக்கிட்டீன் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பகுதியில் அந்த சமூகத்தை சார்ந்த மக்களே இல்லை. அதனால் அந்த 7 சீட்டும் வீணாக இருக்கிறது. அதை மிகவும் பிறப்படுத்தப்பட்ட மக்களுக்கு அல்லது வேறு சமுதாய மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தான்  கூறுகிறோம்.

எதற்கு வீணாக போக வேண்டும் ? இதனால் மற்றவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்கின்றது அல்லவா. கொடுக்காமல் போனால் மற்றவர்கள் கல்வி,வேலை பாதிப்படைகிறது. இந்த ஆண்டு ஒரு சர்வே நடத்துங்க… தமிழ்நாடு முழுவதும் மற்ற சமுதாய மக்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப் பட்டார்கள் என்பது நிரூபணமான உண்மை. அந்த அடிப்படையில் தான் கூறுகிறேன். குறிப்பாக பரமக்குடி கல்லூரிகளில் விசாரித்து பாருங்கள். பல கல்லூரிகள் மாணவர்கள் சேரவில்லை.

அந்த இட ஒதுக்கீடு படிவம் நிரப்பப்படாமல் உள்ளது. ஏனென்றால் அந்த பகுதியில் அந்த சமுதாயத்தை சார்ந்தவர்கள் இல்லை. இதனால் மத்த சமுதாயத்தை சார்ந்த  மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.ஒரு அரசு ஒருதலை பட்சமாக  நடக்க கூடாது. அரசு அனைத்து சமுதாய மக்களுக்கும் சமமான அரசு. அனைவரும் வாக்களித்து தான் இந்த  அரசை  தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

அப்படி ஒரு குறிப்பிட சமுதாயத்திற்கு மட்டும் சாதகமாக செயல்படுவது எந்த விதத்தில் சமூக நீதியை காக்க கூடிய அரசு என்று  கூற முடியும். பல இடங்களில் வன்னியருக்கான 10.5% இடஒதுக்கீட்டுக்கு ஆட்கள் இல்லை .  வழங்கப்பட்ட பகுதியில் அந்த சமுதாயத்தை சார்ந்தவர்கள் இல்லை எனவும் கருணாஸ் தெரிவித்தார்.