வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தற்காலிகமானது தான் – ஓபிஎஸ் பேச்சு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

அந்தவகையில் பிரச்சாரம் மேற்கொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத ஒதுக்கீடு தற்காலிகமானதுதான். சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த பிறகு வன்னியர் இட ஒதுக்கீடு இறுதி ஆகும் என்று தெரிவித்துள்ளார். குழு அறிக்கை அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடுவதற்கும் குறைவதற்கும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.