வனப்பகுதியில் வீசிய துர்நாற்றம்…. இறந்து கிடந்த காட்டு யானை…. வனத்துறையினரின் தகவல்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று காலை பவானிசாகர் வனச்சரக அலுவலர் சிவக்குமார் தலைமையில் வனத்துறையினர் சுஜில்குட்டை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது துர்நாற்றம் வீசும் இடத்திற்கு அருகே வனத்துறையினர் சென்று பார்த்தபோது பெண் யானை இறந்து கிடந்தது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை மருத்துவர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளார். இதனையடுத்து யானையின் உடல் அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, இறந்த யானைக்கு 15 வயது இருக்கும். யானையின் உடல் உறுப்புகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் யானை எப்படி இருந்தது என்பது தெரியவரும் என கூறியுள்ளனர்.