இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஸ்மார்ட்போன்களை உபயோகிக்கின்றனர். ஆனால் பலர் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகி விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போன் இல்லாமல் பலராலும் இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்களது ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் சுஜித்குமார் சமீபத்தில் ஒரு ட்விட்டர் பதிவை பதிவிட்டார் அந்த பதிவில் வழக்கமான நடத்தையின் விளைவாக ஒரு இளம் பெண் பார்வை எவ்வாறு கடுமையாக பாதிக்கப்பட்டது என விளக்கியிருந்தார்.
அதன்படி 30 வயதான மஞ்சு இருட்டில் தனது தொலைபேசியில் அதிக நேரம் செலவழித்துள்ளார். பின்னர் அப்பெண்ணுக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவரின் கூற்றுப்படி ஒளியின் தீவிர பிளாஸ்கள் இருண்ட ஜிக் சாக் வடிவங்கள் மற்றும் எப்போதாவது பார்வையில்லாமல் போவது போன்ற அறிகுறிகள் இருந்துள்ளது. பல வினாடிகள் அந்த பின்னால் எதையும் பார்க்க முடியாமல் போன்ற சூழலும் ஏற்பட்டுள்ளது. இது பெரும்பாலும் இரவில் அவள் கழிப்பறையை பயன்படுத்த எழுந்தபோது நிகழ்ந்தது.
பின் அவர் ஒரு கண் மருத்துவரை அணுகியுள்ளார். நரம்பியல் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடிய செயல்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது. குழந்தையை பராமரிப்பதற்காக அவள் அழகுகலை நிபுணராக இருந்த வேலையை விட்டுவிட்டு பிறகு அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தது. இரவு நேரங்களில் மட்டுமல்லாமல் தினமும் பல மணி நேரம் தனது நேரத்தை ஸ்மார்ட்போனில் செலவழித்துள்ளார். இதை அறிந்த மருத்துவர்கள் அப்பெண் ஸ்மார்ட்போன் விஷன் சின்ரோம் நோயால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
கணினிகள், ஸ்மார்ட்போன்கள், டேப் போன்ற சாதனங்களில் நீண்ட கால பயன்பாடு கணினி பார்வை, நோய்க்குறி அல்லது டிஜிட்டல் பார்வை நோய்க்குறி என குறிப்பிடப்படும் பல்வேறு கண் தொடர்பான இழப்பு அறிகுறிகளை ஏற்படுத்தும். ஆனால் அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர் எந்த விசாரணைக்கும் உத்தரவிடவில்லை. எந்த மருத்துவரையும் பரிந்துரைக்கவில்லை. அவளது பார்வை குறைபாட்டுக்கான சாத்தியமான காரணத்தை பற்றி அவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும் அவளது ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை குறைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.