
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, பூமத்திய ரேகையை ஒட்டி இருக்கும் கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் புதுச்சேரி காரைக்கால் மற்றும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை காணப்படும்.
காலை நேரம் லேசான பனிமூட்டம் நிலவும். வருகிற 26, 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் புதுச்சேரி, காரைக்கால், தமிழகம் ஆகிய ஒரு சில இடங்களில் லேசானது. முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.