பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவானது நாளை (செவ்வாய்க்கிழமை) திறந்திருக்குமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பராமரிப்புப் பணிக்காக செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை விடப்படுவது வழக்கம் ஆகும். ஆனால் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை மக்கள் வருகை இருக்கும் என்பதால் அன்றைய தினம் பூங்கா திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் மக்கள் அதிகம் கூடுவதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. அதாவது, 20 டிக்கெட் கவுன்டர்கள் அமைக்கப்படும் எனவும் 150-க்கும் அதிகமான பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பூங்கா நிர்வாகமானது அறிவித்து உள்ளது.