“வணங்கான்” படத்தில் இருந்து சூர்யா விலகியதற்கு காரணம் என்ன?…. வெளியான டுவிட் பதிவு….!!!!

டிரைக்டர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து தயாராகி வந்த “வணங்கான்” திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகுவதாக நேற்று அறிக்கை வெளியானது. தற்போது இதற்கு பதில் அளித்து சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் டுவிட் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

அதாவது, பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும், முடிவுகளுக்கும் மதிப்பு அளித்து சூர்யா அவர்களும், 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும் வணங்கான் திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்கிறோம். ஆனால் எப்போதும் பாலா அண்ணாவுடன் துணையாக நிற்போம் என்று பதிவிட்டுள்ளது. இதனால் வணங்கான் படத்திற்கு தற்போது யார் தயாரிப்பாளர், இனி யார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நடிகர் ஆகியவை கேள்விக்குறியாக உள்ளது.