வடிவேலுவின் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”…. என்னாது சிரிப்பே வரலையா?…. இனி அதுல கமெண்ட் பண்ண முடியாது…..!!!!!

சுராஜ் டிரைக்டு செய்து சந்தோஷ் நாராயணன் இசையில், வடிவேலு, ஷிவானி, ஷிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கும் திரைப்படம் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”. அடுத்த வாரம் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று  முன்தினம் யூடியூபில் வெளியிடப்பட்டது. வெறும் 2 நிமிட டிரைலரில் எந்த ஒரு இடத்திலும் சிரிப்பே வரவில்லை. நகைச்சுவை என வடிவேலுவும், அவரது கூட்டாளிகளும் எதையோ செய்து கொண்டிருக்கின்றனர்.

இதனால் டிரைலரை பார்ப்பதைவிட அதன் கமெண்ட் பகுதியில் இடம்பெற்ற ரசிகர்களின் கமெண்ட்டுகள் மிகவும் சுவாரசியமாக இருந்தது. பலத்த “டிரோல்” ஆக இருந்த அந்த கமெண்ட்டுகளுக்கு மற்றவர்கள் லைக்குகளை குவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அந்த கமெண்ட் செய்யும் பகுதியை “ஆப்” செய்து விட்டனர்.