வடபழனி கோவிலில்…. அதிரடி காட்டிய அமைச்சர்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையில் அதிரடியாக பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்தவகையில் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபுவின் அதிரடி நடவடிக்கையால் கோபுரத்தை மறைத்திருந்த கூரை அகற்றப்பட்டு முழுமையான கோபுர தரிசனம் கிடைப்பதால் பக்தர்கள் ஆனந்தம் அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, வெளியில் தெரியாமல் இருந்த, 165 வருடங்கள் பழமையான ஆதிமூலப் பெருமாள் கோவிலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *