ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து அமரன் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் ஆன நாள் முதல் அமரன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் படம் சூப்பர் ஹிட் ஆனது.
அமரன் திரைப்படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது . இந்த நிலையில் அமரன் திரைப்படம் ரிலீஸ் ஆன 10 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. சின்னத்திரை மூலம் திரையில் தனது பயணத்தை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் படிப்படியாக உயர்ந்து சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார். இதுவரை சிவகார்த்திகேயனின் எந்த படமும் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது கிடையாது. இதனால் அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையாக அமைந்துள்ளது.