ஜேம்ஸ் கேமரூன் டைரக்டில் அவதார் திரைப்படத்தின் முதல் பாகமானது சென்ற 2009 ஆம் ஆண்டு டிசம்பரில் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை வியப்பில் உறையவைத்தது. இந்த படம் வசூலிலும் சாதனை படைத்து 3 ஆஸ்கார் விருதுகளை பெற்றது

. 13 வருடங்களுக்கு பின் அவதார் திரைப்படத்தின் 2ஆம் பாகம் “அவதார் தி வே ஆப் வாட்டர்”  எனும் பெயரில் தயாராகி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியானது. இந்நிலையில் அவதார் 2 திரைப்படம் 3 வாரங்களில் ரூபாய்.440 கோடி வசூலை ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ரசிகர்கள் பலரும் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.