பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிக்கும் “வாரிசு” மற்றும் அஜித் நடிக்கும் “துணிவு” ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளது. சென்ற ஜனவரி 11ஆம் தேதி வெளியாகிய இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கிடையில் வசூலில் வாரிசு, துணிவு ஆகிய இரண்டு படங்களும் போட்டி போட்டு வருகிறது. இவற்றில் துணிவு திரைப்படம் வெளியான அன்று மட்டும் தமிழகத்தில் ரூ.21 கோடி வசூல் செய்திருக்கிறது என தகவல் வெளியாகி இருக்கிறது.

முதல் நாளில் வாரிசு பட வசூலை துணிவு முந்தி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு இடங்களில் டிக்கெட் கிடைக்காமல் ஹவுஸ்புல் காச்சி ஓடியது. இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் 2ம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் நேற்று மட்டும் துணிவு திரைப்படம் உலகம் முழுவதும் 27 முதல் 32 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இத்தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் துணிவு படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.