வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் உயர்வு….!!

தனியார் வங்கியான ஆர்பிஎல் (RBL) வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் உயர்வு ஜனவரி 25-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சேமிப்பு கணக்கில் வாடிக்கையாளர்களின் தினசரி இருப்பு தொகை அடிப்படையில் வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு வட்டி தொகை செலுத்தப்படும். இந்நிலையில் உயர்த்தப்பட்ட புதிய வட்டி விகிதங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

அதன்படி ஒரு லட்ச ரூபாய் வரை 4.25%, ஒரு லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை 5.50%, 10 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரை 6%, 25 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை 6.50%, ஒரு கோடி முதல் 3 கோடி வரை 6.50%, 3 கோடி முதல் 5 கோடி வரை 6.50%, 5 கோடி முதல் 7.5 கோடி வரை 6.50%, 10 கோடி முதல் 50 கோடி வரை 6.25%, 50 கோடி முதல் 100 கோடி வரை 5.25%, 100 கோடி முதல் 200 கோடி வரை 6%, 200 கோடி முதல் 400 கோடி வரை 6%, 400 கோடி முதல் 500 கோடி வரை 5.25%, 500 கோடிக்கும் மேல் 5.25% வரை வட்டி விகிதங்கள் உயர்ந்துள்ளது.

Leave a Reply