வங்கி கணக்கு எண், ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை…. ரேஷன் கார்டுதாரர்களுக்கு வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர்.  இதற்கிடையில் ரேஷன் அட்டைதாரர்கள் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கு எண், ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை என்று முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர், தமிழகத்தில் உள்ள 2.23 கோடி ரேஷன் கார்டுதாரர்களில், 14.86 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் மட்டுமே ரேஷன் கார்டில் வங்கி, ஆதார் எண் இணைக்காமல் உள்ளனர். ரேஷன் கார்டில் வங்கி, ஆதார் எண் இணைத்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என்ற எண்ணம் இல்லை என்றார்.