வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டு மாற்றும் பணி மும்முரம்!! மார்க்கெட்டில் திடீர் சில்லறை தட்டுப்பாடு !

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணி காரணமாக வங்கிகளில் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்படுவதாக அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி அந்த நோட்டுகளை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளலாம் அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாம் என கூறியுள்ளது. அதன்படி நோட்டுக்களை மாற்றும் பணி வங்கிகளில் தொடங்கியுள்ளது.

அதனால் 2000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக கொடுப்பதற்கு 500 ரூபாய் மற்றும் அதற்கு குறைவான மதிப்பு கொண்ட நோட்டுக்கு வங்கிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் நோட்டு மாற்றுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதாக எந்த புகார்களும் வரவில்லை என வங்கிகளின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply