வங்கிகளில் வட்டி அதிகரிப்பு….. இனி எல்லாமே உயர போகுது…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி….!!!!!

நாட்டின் பண வீக்கத்தை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி கொண்டே வருகிறது. அதனால் பல வங்கிகளிலும் வட்டி விகிதங்கள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி வங்கிகளுக்கு வழங்கப்படும் ரெப்போ வட்டியின் விகிதம் 0.35 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதனால் தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.90 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் வாங்கும் கடல்களுக்கான இஎம்ஐ, டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன் மட்டுமே வங்கிகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.