லோன் ஆப் வச்சுருக்கீங்களா?….. அப்ப புதிய வழிமுறைகளை தெரிஞ்சுக்கோங்க….. ரிசர்வ் வங்கி அதிரடி….!!!!

கடன் செயலிகளுக்கு புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

கடன் வழங்குதல் மற்றும் திருப்பி செலுத்துதல் போன்ற செயல்பாடுகள் அனைத்துமே கடன் வாங்கியவர்களின் வங்கி கணக்கிற்கும், நிறுவனத்திற்கும் இடையில் மட்டும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், கடன் சேவை வழங்குநர் அல்லது மூன்றாவது தரப்பினர் கணக்குகளின் வழியாக இவை செலுத்தப்படக்கூடாது என தெரிவித்துள்ளது. டிஜிட்டல் கணக்கு வழங்குனருக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை வங்கி போன்ற ஒழுங்கும் முறைக்குட்பட்ட நிறுவனங்கள் தான் செலுத்த வேண்டும் என்றும், கடன் வாங்கியவர் செலுத்த வேண்டிய தேவை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் தருபவரின் வெளிப்படையான ஒப்புதல் எதுவும் இல்லாமல் கடன் வரம்பை தானாக அதிகரிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. கடன் பெற்றவர்கள் அசல் மற்றும் ப்ரொபோஸ்னெட் வட்டியை அபராதம் இல்லாமல் செலுத்தி டிஜிட்டல் கடன்களை விட்டு வெளியில் செல்லலாம். அதற்கான கூலிங் ஆப் காலம் கடன் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதோடு டிஜிட்டல் கடன் குறித்த புகார்களை கையாள்வதற்காக நோடல் குறைதீர்க்கும் அதிகாரி இருப்பதை வங்கிகள் அல்லது நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு உறுதி செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *