லோகேஷீடன் மீண்டும் இணைந்த பிரபலம்….யார் தெரியுமா?…. தளபதி 67 லேட்டஸ்ட் அப்டேட்…!!!

தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 3 ஆம் தேதி வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் அடுத்ததாக தளபதி விஜய் இயக்கவுள்ளார். வாரிசு படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து கொண்டு இருகின்றனர்.

இதனையடுத்து மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படம் விஜய்யின் படமாக இல்லாமல் முழுக்க முழுக்க லோகேஷ் ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் லோகேஷீடன் இயக்குனர் ரத்தினகுமார் இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மாஸ்டர், விக்ரம் படத்தில் இயக்குனர் ரத்னகுமார் வசனம் எழுதினார். எனவே வெற்றி கூட்டணி மீண்டும் தளபதி 67 படத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *